கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு வாணி விழா நிகழ்வில் கௌரவம்!!


"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" உதவும் கரங்கள் அமைப்பின் இவ்வாண்டிற்கான வாணி விழா நிகழ்வு மயிலம்பாவெளியில் உள்ள உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய ச.ஜெயராஜா தலைமையில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் முதலில் முப்பெரும் தேவியர்களுக்குமான வாணி விழா சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி சாமினி ரவிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மாதிபரும் சிரேஸ்ட  சட்டத்தரணியுமான அஜித் ரோகன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்  பொலிஸ்மாதிபர் பூஜித்த லியனகே ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான திருமதி புஸ்பவாணி, திருமதி டிலாந்தி மோகனகுமார் ஆகியார் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உபதலைவர் சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம், செங்கலடி சரணி கலைக்கழகத்தின் தலைவர் திருமதி சுதாகரி மணிவண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு, மாணவிகளின் கண்கவர் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து உதவும் கரங்கள் அமைப்பின் உபதலைவரும் ஏறாவூர்ப்பற்று - 1 கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய த.ராஜமோகன் அவர்களின் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து மாணவர்களது அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதும், அதிதிகள் உரையினைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மாதிபரும் சிரேஸ்ட  சட்டத்தரணியுமான அஜித் ரோகன அவர்களது சேவையினைப்பாராட்டி 

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய ச.ஜெயராஜா அவர்களினால் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன், மாகாண இறைவரி திணைக்களத்தின் முன்னால் ஆணையாளர் வீ.மகேந்திரநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.






















Powered by Blogger.