அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாரக் அவர்களின் வழிகாட்டலில் செயலாளர் நாயகம் வி.பற்குணன் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் 2022 ஆண்டிற்கான பொதுக்கூட்டமானது மண்முனைப்பற்று பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மௌன இறைவணக்கம் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி
உயிர் நீத்த உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக எதிர்வரும் காலங்களில் இத்தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தலைவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத்திற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதுடன், செயலாளர் நாயகமாக வீ.பற்குணன் தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தலைவராக மீண்டும் ஏ.ஜீ.முபாறக் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு தொழிற்சங்கத்தின் உபதலைவராக திவாகரன், பொருளாளராக ஜவ்பர், ஊடக செயலாளராக உ.உதயகாந்த் உள்ளிட்டோரும் உபசெயலாளர்கள், உதவி பொருளாளர், தேசிய அமைப்பாளர், ஆலோசகர்கள் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.