மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஆலோசனையில் கைறாத் கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் வசந்தம் நிகழ்வு ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மன்பஉல் கைறாத் ஜும்ஆ பள்ளிவாயலில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
கைறாத் கலை கலாசார மன்ற தலைவர் ஜனாப் எம்.ஐ.எம்.நஷீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் த.மலர்ச்செல்வன், கலாசார உத்தியோகத்தர் திருமதி.ராதிகா கருணாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முசாதிக், கைறாத் கலைக்கழக உறுப்பினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கவிதை, பாடல், பேச்சு போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வை பிரதேச கலாசார பேரவை மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.