இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை : நீதிமன்றின் தீர்மானம்


இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை(Toque macaque) ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடர்பான மனு மீதான விசாரணையை நிறைவுசெய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், முதற்கட்டமாக 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இத்திட்டத்திற்கான சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் குரங்குகள் இல்லை என்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்து இதற்கான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான தீர்மானங்களை விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான விசாரணையை நிறைவுசெய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  

Powered by Blogger.