புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தினை வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்; செந்தில் அழைப்பு!!



புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில் முதலீடுகளை செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப்போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கிழக்கில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற சுவிஸ் நாட்டை சேர்ந்த கல்லாறு சதீஸின் ‘பனியும் தண்டனையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திரைப்பட தயாரிப்பாளரும் பதிப்பாளருமான மு.வேடியப்பன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவநீதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் நூலகர் கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின்போது கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர்,

மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். கல்வியை அவர்கள் பற்றுடன் முன்னெடுக்ககூடிய வகையில் அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இந்த கிழக்கு மாகாணம் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 30 வருடமாக இலங்கை அரசாங்கத்தினால் வளர்ச்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவரவேண்டிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் இங்கிருந்து புலம்பெயர்ந்துசென்றுள்ளவர்கள் மீண்டும் இங்குவருவதற்கு முன்னுதாரணமாக இங்குவ்ந்துள்ளார். புலம்பெயர்ந்துசென்றவர்கள் இங்கு முதலீடுகளை செய்து தொழில்துறையினையும் அபிவிருத்திகளையும் செய்யவேண்டும். இது உங்களின் பிரதேசம், உங்களது நாடு மீண்டும் கிழக்கு மாகாத்திற்கு வந்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தேவை.



Powered by Blogger.