விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 7, 2023) காலை 11:27 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.