மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரிலுள்ள மின்கம்பத்தில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்று (30) மாலை மோதுண்டதில் வாகனம் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் இவ் விபத்து திடீரென நிகழ்ந்ததால் டிப்பரின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் டிப்பரில் மோதுண்டதில் அதில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.