இலங்கையில் முதன் முதலாக உற்பத்தி செய்த உள்ளூர் உயர் கலப்பின சோளம் மட்டக்களப்பில் அறுவடை!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் உயர் கலப்பின சோளம் அறுவடையானது பிரதி விவசாய விரிவாக்கல் பிரிவின் பணிப்பாளர் கே.பேரின்பராசா தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச  செயலக பிரிவில் உள்ள முல்லாமுனை பகுதியில் இன்று இடம் பெற்றது.

இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட உயர் கலப்பின சோள வகையான MI MAIZE HY - 5  பரிட்சாத்தமாக மட்டக்களப்பு கரவெட்டி விவசாய போதனாசிரியர் பிரிவில் பயிரிடப்பட்டதுடன்,  இச் சோளம் பயிரானது சிறந்த விளைச்சளை தந்துள்ளதுடன், 3 மாத சோள செய்கையின் அறுவடை விழாவே இன்று (18) திகதி இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் கணேசமூர்த்தி, விவசாய போதனா ஆசிரியர் கோசலை ரூபன், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், சேனை பயிர்ச்செய்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.











Powered by Blogger.