அஸ்வெசுமக்காக அரச வங்கிகளை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்!!


அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கியில் கணக்குகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க மக்கள் தற்போது அரச வங்கிகளை நோக்கிப் படையெடுத்து நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.

தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளிலும் தமக்கான கணக்கொன்றைத் திறப்பதற்காக மக்கள் அலைமோதுகிறார்கள்.

ஜுலை மாதம் முடிவடைவதற்குள் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்தவிதத்தில் அசுவெசும கொடுப்பனவுக்காகத் தெரிவு செய்யப்பட்ட பயனளிகள் வங்கிகளில் குழுமியுள்ளார்கள்.

இன்றை தினம் 31.07.2023 மாத இறுதித் தினம் என்பதனால் அதற்குள் கணக்கைத் திறந்து விட வேண்டும் என்ற ரீதியில் மக்கள் தகிக்கும் வெய்யிலிலும் வங்கிகளில் வரிசையில் நின்று அலைமோதுகிறார்கள்.
Powered by Blogger.