கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மட். கடந்த செவ்வாய்க்கிழமை (11) காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம் பெற்ற போது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனது அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கு பேசும்போதே அமைச்சர் காரசாரமாக ஆளுநரை விமர்சித்தார்.