மட்டக்களப்பு மாவட்ட சமுத்தி சமூதாய அடிப்படை அமைப்புக்ககளிற்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி!!
மட்டக்களப்பு மாவட்ட சமுத்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களிற்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலாமதி பத்மராஜா தலைமையில் சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஏற்பாட்டில் சிவானந்தா மைதானதில் இறுதி போட்டிகள் நேற்று (18) திகதி நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களிற்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூலம் அவர்களின் பலப்பரீட்சையை வெளிக்காட்டி இறுதி சுற்றில் மண்முனை வடக்கு பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினருக்கும் ஏறாவூர் நகர் சமுதாய அடிப்படை அமைப்பினருக்கும் போட்டி இடம்பெற்றதில் ஏறாவூர் நகர் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை சூவீகரித்துள்ளனர்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நாவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட புள்ளி விபரவியலாளர் ரி.ஜெய்தனன், மாவட்ட கணக்காளர் எம்.வினோத், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மனோகிதராஜ் என பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னொடுக்கப்பட்டிருந்த குறித்த போட்டி நிகழ்வில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.