அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படும் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் இது தொடர்பான பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று (05) முதல் அனைத்து செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.