இலங்கையில் சனத் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சனத் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சனத் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சனத் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் 15வது சனத் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.
எனினும், கொவிட் -19 தொற்று நோய் காரணமாக அரசாங்கம் அதை ஒத்திவைக்க அப்போது நடவடிக்கை எடுத்திருந்தது.
இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 1871 இல் நடத்தப்பட்டது. இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டது.
சனத் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.