மட்டக்களப்பில் வருடாந்த மாவட்ட உளநல மீளாய்வு கூட்டம்!!


மட்டக்களப்பில் வருடாந்த மாவட்ட உளநல  மிளாய்வு கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் வழிகாட்டுதலின் கீழ் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நவலோஜிதன் தலைமையில்  இன்று (17) பிராந்திய சுகாதார  பணிமனை  மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் உளநல  பணிப்பாளர் வைத்தியர் ரோஹான் ரத்நாயக்க கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  மனநல செயற்திட்டங்கள் தொடர்பாக வைத்தியர் டான் சௌந்தரராஜாவினால் அளிக்கை செய்யப்பட்டது.

பிரதேச ரீதியான அறிக்கைகள் இதன் போது அதிகாரிகளினால் விபரிக்கப்பட்டதுடன் மனநல சேவைகள் வழங்கும் போது எதிர்நோக்கும்  சவால்கள் மற்றும் பிரச்சினைகள்  தொடர்பாக அதிகாரிகள் அனுபவ பகிர்வை மேற்கொண்டிருந்ததுடன் அதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டது. 

போதைப்பொருள்  பாவனையினால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டிப்பதை சுட்டிக் காட்டியதுடன் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதற்கு பொறுப்பாக பாடசாலை மட்டத்தில் பொறுப்பான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

இதன போது சமூதாய மட்டத்தில் மனநல சேவையினை விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  வைத்திய நிபுணர்கள், உளநல வைத்திய நிபுணர் (பதில்) வி.சிந்துஜன், வலய கல்வி  பணிமனை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.










Powered by Blogger.