சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை - இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்!!


இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேற்படி நிலநடுக்கம் தொடர்பில் இலங்கைக்கு சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மக்கள் இது தொடர்பில் பீதி அடைய தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.




Powered by Blogger.