களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபேபட்டுள்ளதோடு இருவருக்கு சிறியளவான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது கம்பஹா இருந்து காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஒரே குடும்பத்தினர் பயணித்த வேனே செட்டிபாளையம் பகுதியில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. மட்டு கல்முனை பிரதான சாலை வழியால் பயணித்துக்கொண்டிருந்த குறித்த சிறியரக வேனானது செட்டிபாளையம் பகுதியிலுள்ள உள்ளக வீதியொன்றிலிருந்து திடீரென பிரதான வீதியை கடக்க முற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்தோருடன் மோதுவதை தவீர்க்க முற்ப்பட்ட வேளை வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகி வீதியின் சிறிது தூரம் பயணித்து மீண்டும் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர்மீது மோது அவரையும் படுகாயமடையச்செய்து பின் மின்சார தூணில் மோதி மீண்டும் சரியான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக அறிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் வேனினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச்சென்றுள்ளனர்.