புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி!!


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது  ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி பழைய மாணவர் சங்கத்தின் 150 வது வருட ஒழுங்கமைப்பு குழு தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தலைமையில்  புனித மிக்கேல் பாடசாலையில் (22) இடம்பெற்றது. 

புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதல் கட்டமாக மட்டக்களப்பில் உள்ள பிரதான பாடசாலைகளின் பழைய மாணவர்களிற்கிடையிலான கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் யூலை மாதம் 29ம், 30ம் திகதிகளில் சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக்கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழையமாணவர்கள் போட்டியிடவுள்ளனர்.

பாடசாலைகளிற்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக  இப்போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் முதல் தடவையாக பழைய மாணவர்களிடையிலான கடினப் பந்து கிரிக்கட் போட்டி  இடம் பெறுவது இதுவே முதற் தடவையாகும். 

150வது வருட நிறைவினை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் தபால் முத்திரை வெளியிடப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பழைய மாணவர்சங்க உதவி போசகர்  அருட்தந்தை போல் சற்குணநாயகம், பழைய மாணவர் சங்க உபதலைவர் இயேசு சபை துறவி அருட்தந்தை ரொசான் மற்றும் இச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும் முன்று பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








Powered by Blogger.