மதுபானசாலைகளுக்கு பூட்டு- பக்தர்களுக்கு எச்சரிக்கை!!


வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹராவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானசாலைகள் எதிா்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், ஆலயத்தின் எசல திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் எவரும் போதைப்பொருள்களை ஆலயத்திற்குள் கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் கடமைகளை மேற்கொள்வதற்காக ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலால் அதிகாரிகள் குழுவொன்று அந்த பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.