திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.