சாரதி அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீடிக்க முடிவு!!


காலாவதியான சாரதி அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT)) முடிவு செய்துள்ளது.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க டெய்லி மிரர் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

காலாவதியான சாரதி அனுமதி பத்திர உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர உரிமங்கள் பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Powered by Blogger.