இணைய வழியில் இலகுவாகப் பாஸ்போட் பெறும் முறை!!


விண்ணப்பதாரி ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிக் கொள்ளக் கூடியயவராகவும் கணனிப் பிரயோகம் தெரிந்தவராகவும் இருத்தல் அவசியமானது.

அவ்வாறு இல்லாவிடில் அவ்வாறு தெரிந்த ஒருவரது உதவியை நாடுங்கள்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு


எனும் இணைப்பைக் கிளிக் செய்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத் தளத்தினுள் பிரவேசியுங்கள்.

பின்னர்


எனும் தெரிவைக் கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் இப் பக்கத்தில் 02 தெரிவைக் காண்பீர்கள்.

01.வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைக் கடவுச் சீட்டைக் கொண்டுள்ள இலங்கையர்களுக்கான தெரிவு.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எப்படிப் பாஸ்போட் பெறுவது என்பது தொடர்பான பக்கத்தை உள்சென்று பார்க்க முடியவில்லை.

02. இலங்கையில் வசித்துப் பாஸ்போட்டைப் பெற விரும்பும் இலங்கையர்களுக்கான தெரிவு.

இதை நீங்கள் கிளிக் செய்யவும்.


எமது நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 51 பிரதேச செயலகங்கள் ஊடாக பாஸ்போட் பெறுவதற்கு

அல்லது

கொழும்பிலுள்ள பாஸ்போட் அலுவலகம் ஊடாகப் பெறுவதற்கு

அல்லது

வவுனியா, மாத்தறை, கண்டி,குருநாகல் அலுவலகங்கள் ஊடாகப் பாஸ்போட் பெறுவதற்கு

கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தெரிவை மேற்கொள்ளலாம்.


இதில் 05 தெரிவுகள் காணப்படும்.

முதலாவது தெரிவு - ஒருவர் பாஸ்போட் பெறுவதற்கு விண்ணப்பித்தல்.

இதில் 07 வகையான அறிவுறுத்தல்கள் உள்ளது.

01.எப்படி விண்ணப்பிப்பது.

02. விண்ணப்பிக்கத் தகுதியானோர் யார்?

03.விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் எவை.

04.பொதுவான தகவல்கள். பாஸ்போட் விண்ணப்பம் கட்டாயமாக ஆங்கில மொழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

05 . பாஸ்போட் பெறுவதற்குரிய அலுவலகமாக எதனைத் தெரிவு செய்யப் போகிறீர்கள்.

5.1.3 எனும் தெரிவில் உங்களது மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகம் இருக்கிறது.

5.1.1 கொழும்பு பத்திரமுல்ல தலைமை அலுவலகம்.

5.1.2 நான்கு பிராந்திய அலுவலகங்கள்.- வவுனியா,கண்டி,குருநாகல், மாத்தறை

5.2 எனும் பகுதியில்
உங்களது கைரேகை அடையாளத்தைப் பதிவு செய்தல், புகைப்படப் பதிவைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றை எங்கே நீங்கள் செய்யப் போகின்றீர்கள் என்ற விடயம் உள்ளது.

இவ்வாறே 5.3 ,5.4, 5.5, 5.6 எனும் பகுதிகளில் உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

6 எனும் இலக்கத்திலுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.6.1 முதல் 6.7 வரையில் விண்ணப்பதாரி கொண்டிருக்க வேண்டிய தகுதிகள், ஆவணங்கள் தொடர்பாகக் கூறப்படுகிறது.

7 வது பகுதியில் கட்டணம் செலுத்தும் முறை கூறப்படுகிறது.

இறுதியில் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறேன். என்ற ஆங்கிலப் பதிவை ஏற்றுக் கொண்ட பின்பாக பக்கங்கள் வரும். அதன்படியே செல்லுங்கள்.
Powered by Blogger.