மட்டக்களப்பில் ஆரம்பித்துை வைக்கப்பட்ட பெண்களுக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (01) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில்  இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டு இடம்பெற்ற பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வானது, அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டு, 16 அணிகளின் கொடியேற்றத்துடன் முதல் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்குடா உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் த.ரமேஸ், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சதாசிவம் சந்திரகுமார், வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை, வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் பங்குதாரர்களான கா.சதீசன், கா.வித்தியா, கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், ஈ.சிவநாதன், கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பீ.சடாட்சரராஜா, செயலாளர் வீ.ஜெயதாசன், நடுவர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.












Powered by Blogger.