முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று (29) காலை 6.15 மணியளவில் காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஆயிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகையையும் அதன்பின்னரான குத்பா பிரசங்கத்தினையும் அஷ்ஷெய்க். மௌலவி எம்.எச்.எம். ஜிப்ரி (மதனி) நடாத்தி வைத்தார்.