"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' வேலைத்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சரினால் காசோலை வழங்கிவைப்பு!!

"சுபீட்சத்தின் நோக்கு - உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக  மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கான காசோலைகள் கையளிக்கும் நிகழ்வு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்திக் குழு  தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு   காசோலைகளை உரிய பயனாளிகளுக்கு  வழங்கி வைத்துள்ளார்.

"சுபீட்சத்தின் நோக்கு - உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' எனும் தொனிப்பொருளில் கடந்த 2021 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளே கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மண்முனை மேற்கு, மண்முனை பற்று , வாகரை மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 

பகுதிகளில் தெரிவு செய்யப்பட்டு வீடுகளின் கட்டுமான பணிகளை மேற்கொண்டுவரும் 28 பயனாளிகளுக்கு இதன்போது 39 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 320 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆறுமுகம் தேவராஜா, இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் த.தஜீவரன், தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் ஆறுமுகம் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









Powered by Blogger.