மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் தமது இவ்வாண்டிற்க்கான செயற்பாடுகளின் ஒன்றாக ஒருநாள் சுற்றுலாவினை ஏற்பாடு செய்துள்ளது.
திட்டமிடப்பட்டுள்ளபடி சுற்றுலாவானது எதிர்வரும் யூலை மாத நடுப்பகுதியில் 15.07.2023 திகதி இடம்பெறவுள்ளது.
இச்சுற்றுலாவின் போது மகியங்கனையில் உள்ள பழங்குடி மக்களது (ஆதிவாசிகள்) இருப்பிடம், அவர்களது வரலாறு, கலை கலாசார நிகழ்வுகள் போன்றவற்றை கண்டுகளிப்பதுடன், வெண்ணீர் ஊற்று உள்ளிட்ட மேலும் பல புராதன இடங்களையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலாவில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினராகவுள்ள சமாதான நீதிவான்கள் எதிர்வரும் 20.06.2023 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் (0777245494, 0776016218 , 0776179582) தொடர்பை ஏற்படுத்தி தங்களது விபரங்களை பதிவு செய்வதன் ஊடாக தாங்களும் குறித்த சுற்றுலாவில் கலந்துகொள்ளலாமென சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முஹியித்தீன் கேட்டுக்கொண்டுள்ளார்.