தாந்தாமலை மலையூர் ஆட்டத்தின் சம்பியனாக முதலைக்குடா விநாயகர் அணி!!


படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு- தாந்தாமலை ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் தனது 14வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய "மலையூர் ஆட்டம்" என வர்ணிக்கப்படும் அணிக்கு 07பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளி(02), சனி(03) மற்றும் இன்று (04) ஆகிய தினங்களில் இடம்பெற்றது.

குறித்த சுற்றுப் போட்டியில் 45 கழகங்கள் கலந்துகொண்டு விளையாடியிருந்தனர்.

இதில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி சிறந்த முறையில் விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறி மலையூர் ஆட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர்

1ஆம் இடம் முதலைக்குடா விநாயகர் அணி
2ஆம் இடம் கரையாக்கன்தீவு காந்தி அணி
3ஆம் இடம் பண்டாரியாவெளி நாகர் அணி
4ஆம் இடம் பனையறுப்பான் கஜமுகா அணி

குறித்த சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஆண்டுக்கான படுவான்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் மூன்று முறை முதலிடத்தினையும் (நெல்லிக்காடு, வாழக்காலை மற்றும் தாந்தாமலை) ஒரு முறை மூன்றாம் இடத்தினையும் (சில்லிக்கொடியாறு) முதலைக்குடா விநாயகர் அணியானது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையூர் ஆட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரராக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழக வீரரான சுகந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
Powered by Blogger.