காட்டில் பயணிக்கவிருக்கும் பாதயாத்திரீகர்களுக்கு சித்தர்கள் குரல் சங்கர் ஜியின் முக்கிய அறிவிப்பு!!

இம்முறை எதிர்வரும் 12 ஆம் திகதி  திங்கட்கிழமை முதல் காட்டு வழிப்பாதையின் ஊடாக உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி ஓர் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவரது அறிவிப்பில் பின்வரும் கோரிக்கைகள் பாதயாத்திரை செல்லவுள்ளோரை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது.

கதிர்காம பாதை திறக்கப்படும் தினத்திலிருந்து யாத்திரை செல்லும் அடியார்கள் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றை கொண்டு செல்வதை தவிருங்கள் என்றும், மீறி தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் கொண்டு செல்லப்படும் இவ்வாறான பொருட்களை அந்த அந்த இடத்திலேயே எரித்து விடுங்கள். இன்னும் எத்தனையோ வருடங்களுக்கு எமது உறவுகள்தான் இந்த காட்டு வழியாக அடியார்களாக செல்லப்போகின்றார்கள். அவர்களுக்கும் நாம் செய்வதை சொல்லிவிட்டால் அவர்களும் அதனை பின் தொடர்வார்கள்.

எமது நாடு பாரம்பரிய தெய்வீக சித்தர்கள், ரிஷிகள் உலா வரும் இடமாகவும், யாத்திரை எப்போது தொடங்கியது என்பது இதுவரை யாருக்கும் தெரியாததுமான காட்டு வழிப்பாதையால் நாம் தொடர்ந்து பாதயாத்திரையாக செல்கின்றோம். முருகனின் அருள் மட்டுமல்ல, அதிசயங்கள் நிறைந்த புண்ணிய பூமி. எவ்வளவோ நேர்த்திகள், அவ்வளவிற்கும் அங்குள்ள தெய்வங்களின் அருளாசிகள், காணக்கிடைக்காத அற்புதங்கள், வருகின்றவர்களின் எண்ணங்களை, கஷ்டங்களை நிறைவேற்றும் புண்ணிய தலத்தினை கண்குளிர கண்டு விடைபெறும் அமைதியே அமைதி. ஒரு வருடத்தில் ஒருமுறைதான் வருவதுண்டு. அதனை நாமே சரியான பாதையில் ஒழுக்கநெறி தவறாது கடைப்பிடித்து செயற்பட்டால் இனிவரும் சந்ததியினரும் வழி தவறாது செயற்படுவார்கள்.

Powered by Blogger.