யூரியா உரப்பொதியின் விலை 9000 ரூபாவாக குறைப்பு!!


யூரியா உரப்பொதியின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் இன்று (15) முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவுக்கு அதிகமாக காணப்படுகின்றது.

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனிடையே 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரம் கப்பல் மூலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த கப்பலில் இருந்து உரத்தை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.