புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி - கரிக்கட்டை பகுதியில் இன்று (30) காலை பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
பஸ் என்ஜின் வெப்பமடைந்தமையினால், தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தீயணைக்கும் வாகனங்களின் உதவியுடன் காலை 6 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், பஸ் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ பரவியபோது பஸ்ஸில் 40 க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். எனினும், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.