அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு தின நிகழ்வு!!


இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட ஃஅருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு, உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

 1987 மற்றும் 1988 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களின் போதும், இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போதும் இன

நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயற்பாட்டில் ஈடுபட்டு, ஆன்மீக வாழ்வினை அர்ப்பணித்த அருட்தந்தை சந்திரா அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திதிகதிகதி இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின விசேட அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல்சமய ஒன்றியத்தின் அனுசரணையில், மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.

இதன்போது அடிகளாரின் சமாதியில் மெழுகுதிரி ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு அடிகளாரின் சேவைநலன் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், குறித்த நினைவு அஞ்சலி விசேட நிகழ்வில் புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள், அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.











Powered by Blogger.