இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று (24) சந்தித்து, நலம் விசாரித்துள்ளனர்.
இதன்போது, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.