பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களை ஊக்குவிப்பதற்கான உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வு!!


பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களை ஊக்குவிப்பதற்கான உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் பதுளையில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ள பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளநிலை பட்டதாரிகளுக்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய கௌரவ அ. அரவிந்தகுமார் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க தியாகி அறக்கொடை நிதியம் இவ் வேலை திட்டத்தை பதுளை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளது. 

இவ்வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வரை மாதாந்தம் இவ் உதவித்தொகையினை  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இவர்களுக்கான முதலாவது ஊக்குவிப்பு தொகை அண்மையில் பதுளை செனரத் பரண வித்தாரண மண்டபத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அ. அரவிந்தகுமார், தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகர் திரு. வாமதேவன் தியாகேந்திரன்,அவரின் இணைப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.












Powered by Blogger.