காலநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவில் நீருக்கடியில் ஏற்படும் நிலசரிவுகளால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து வெளியான அறிக்கையில், நீருக்கடியில் ஏற்படும் நிலசரிவுகள் உலகளாவிய ரீதியில் பேராபத்தை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, 1998 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா அருகே நீர்மூழ்கிக் கப்பல் நிலசரிவை ஏற்படுத்தியது. இது மாபெரும் சுனாமி அலைகளை உருவாக்கியது. இதில் 2200 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது அண்டார்டிகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீருக்கடியில் நிலசரிவுகள் ஏற்பட்டு சுனாமி அலைகளை உருவாக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.