வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை - வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது தென்னந்தோப்பில் இருந்த போது, சந்தேகநபர் ஒழிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த இருவருக்கும் இடையில் மிக நீண்ட காலமாக நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் முன்னிலையில் இன்று(23) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.