வெசாக்கை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு!!


பொசன் பூரண தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பௌத்த பூஜை வழிபாடுகளும், தாகசாந்தி நிகழ்வுகளும் பௌத்த மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டடத்திலும் விசேட பொசன் பூரணை தின தானம் மற்றும் தாகசாந்தி வழங்கும் நிகழ்வுகள் காலை முதல் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய முன்றலில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில் பொசன் பூரணை தின தாகசாந்தி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த தாக்க சாந்தி நிகழ்வில் சிறுவர்கள், பெரியவர்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தாக்க சாந்தி நிகழ்வினை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.