இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்!!


கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நுளம்புகள் உற்பத்தியாகும் சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.