உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!


மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தமது பிரதிவாதிகள் இதுவரை நிர்ணயிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

திறைசேரியில் தேர்தலுக்கு பணம் விடுக்கப்பட்டாலோ அல்லது தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலோ அல்லது அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

குறித்த மனுவை விசாரிப்பதற்காக அழைப்பாணை வழங்குவது தொடர்பாக கடந்த விசாரணை திகதியில் சாலிய பீரிஸ் அடிப்படை ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.