முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று(11May) முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.