கிழக்கு மாகாண கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தை இன்று (27) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாணத்தின் கடற்கரைகளை ஆசிய கண்டத்தின் அழகான மற்றும் தூய்மையானதோர் கடற்கரைகளாக மாற்றுதல் எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் சிரமமான பணியை ஆரம்பித்து வைத்தார்.
இச்சிரமதான பணியில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாகாணத்தைச் சேர்ந்த அரச அலுவலகங்களின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.
அதேவேளை ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் இன்றைய தினம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.