புதிய மின்சாரக் கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!


ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதில் ஜூன் 1ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி, கட்டண திருத்தம் தொடர்பில், கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
Powered by Blogger.