சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்லடியில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கும் இதன்போது விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. ஜேசுதாசன் கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. ஜேசுதாசன் கலாராணி, நிஸ்கோ முகாமையாளர் திருமதி. சதீஸ்வரி கிருபாகரன் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் யுவப்பிரகாஷ் மாவட்ட மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.