மட்டு. பொலிஸார் மாணவர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

மட்டக்களப்பு தலைமைய பொலிசார் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது எனவே பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் கொண்ட துண்டுபிரசுரம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (22) விநியோகித்துள்ளனர்.

இதில் பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீடுகளுக்கு உடன் செல்லவும், இனந்தெரியாதோர் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனம் தெரியாதேர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும், மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பிற்கு அல்லது 065 2224356, 065 2224422 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு துண்டுபிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

 



Powered by Blogger.