நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இணையத்தில் (Online) விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ்* இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது.
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.
மின்னஞ்சல் முகவரி மூலம் மக்கள் தொடர்புடைய தற்காலிக உரிமத்தைப் பெறுவார்கள் மற்றும் நிரந்தர உரிமம் சில நாட்களில் பதிவு அஞ்சல் மூலம் கிடைக்க பெறும். மக்கள் இந்த வசதியை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் மேலும் இது Lanka Government Network மற்றும் Lanka Government Cloud ஆகியவற்றின் உட்கட்டமைப்பு அமைப்புகளால் இயக்கப்படுகிறது.
வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை வினைத்திறனாக்கும் நோக்கில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் வசதிகள் சேர்க்கப்படவுள்ளதுடன், எந்தவொரு மாகாணத்திலும் வாகனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்தவொரு பிரதேச செயலக அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.