70 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேரூந்து!!


நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கம்பஹா வத்துருகம பகுதியில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்றபோது 70 பயணிகள் ​​பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகவேகத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Powered by Blogger.