மட்டக்களப்பில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி!!



மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து நேற்று (13) திகதி இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட பாடு மீன் நகர் சேர் கடுகதி ரயில் மோதியே பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.35 இற்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து சடலத்தை மீட்ட மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சத்துரகொண்டான், பாடசாலை விதியை சேர்ந்த 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ரயிலில் மோதுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த  ஏறாவூர் திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்ததுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய  உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Powered by Blogger.