நாட்டில் பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பெட்ரோலியம் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
மேலும் தபால் சேவை, வைத்தியசாலைகள், நர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.