மட்டக்களப்பை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் என்.தேவநேசன் அவர்களின் “ஆன்மீகமும் மனிதனும்” என்ற நூலின் விளக்க உரையும் அதிதிகளின் ஆன்மீக பேச்சுக்களும் (தியானம் & கலை நிகழ்வுகளும்) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு - மாமாங்கம், ஸ்ரீ விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வினை என்.தேவநேசன் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார்.
குறித்த நிகழ்வில் வைத்திய கலாநிதி ரீ.சுந்தரேசன், வைத்திய கலாநிதி சாந்தி கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றியதுடன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கே.குபேரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
“ஆன்மீகமும் மனிதனும்” நூலின் விளக்க உரை நிகழ்த்தப்பட்டதுடன், மாணவர்களின் கண்கவர் அழகிய நடனங்களும் அரங்கை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கலந்துகொண்ட அனைவரிற்கும் மட்டக்களப்பு ராமகிருஷ்ணதேவா பவுண்டேசனின்
அனுசரனையுடன் புத்தகம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.