மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புடன் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள்!!



(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) உயித்த ஞாயிறு தின ஆராதனைகள் இடம்பெற்றன.

கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களாக கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்றுவரும் ஆராதனைகளின் போது தேவாலயத்தில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன்,  இராணுவத்தினர், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினார் இணைந்து பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

தேவாலயங்களிற்கு பெரும் திரளான இறைவிசுவாசிகள் வருகை தந்துடன்,  பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஆராதனைகளிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.