நீர் கட்டணத்தை உயர்த்த திட்டம்!


நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மேலதிக செலவை சபை ஏற்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

“மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில் நீர் கட்டணமும் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2023 ஜனவரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆனால் அந்த உயர்வு இன்னும் நீர் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை,” என்றார்.

“இருப்பினும், புதிய மின் கட்டணத்தை நிர்வகிக்கும் போது நீர் சபை மேலதிக செலவுகளை ஏற்க வேண்டியிருந்தது. ஆனால் எங்களால் இதை நீண்ட காலத்திற்கு செய்ய முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின் கட்டண உயர்வால் நீர் சபைக்கு மேலதிகமாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகிறது.

நிலவும் வெப்பமான காலநிலையால் நீரின் தேவையும் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.