உண்மையை நோக்கிய நியாய பயணத்தில் சந்தியா எக்னெலிகொட பங்கேற்பு!!


கடந்த 340 நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உண்மையை நோக்கிய நியாய பயணத்தில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா இன்று (16) திகதி பங்கேற்றிருந்தார்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இருந்து காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட  உண்மையை நோக்கிய நியாயத்திற்கான பயணம் காந்தி பூங்காவை  சென்றடைந்தது மகாத்மா காந்தியை தரிசித்ததும் நிறைவிற்கு வந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும் ஆவார்.

சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றிவந்த நிலையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவராவார்.

Powered by Blogger.